உலகின் அதிக நரபலி கொடுக்கப்பட்ட இடம் என்று சொல்லப்படும் பெருநாட்டில், 227 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் தலைநகரம் லீமாவை அடுத்த ஹுவான்ஷாஅகோ என்ற இடத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் 227 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்ட நரபலி என தலைமை தொல்லியலாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் துரிதமாக செயல்பட்டு ஆராய்ச்சியை ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.இதில் தற்பொழுது தோண்டப்பட்டது வரை 6 முதல் 14 வயது வரையிலான 227 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை ஆராய்ச்சி செய்ததில் அனைத்தும் கிபி க்கு பின் 1200 முதல் 1500 ஆண்டுகளுக்குள் கொடுக்கப்பட்ட நரபலி என்பது தெரிய வருகிறது.
இந்த நரபலியானது அக்காலத்தில் மோசமான வானிலை ஆக கருதப்பட்ட எல் நினோ என்ற இயற்கை சீற்றத்தை தவிர்க்கவே கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இன்னும் தோண்டுதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தோண்டத் தோண்ட குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதால் உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொழில்நுட்பம் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்த இந்த காலகட்டத்தில் இன்னும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நரபலி கொடுக்கும் பழக்கம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது..