சென்னையில் விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு , பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்கள் தேர்வு செயய்யப்பட்டு சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் ராட்சத கிரேன்கள், படகுகள், உயிர் காக்கும் குழுக்கள், நீச்சல் வீரர்கள், மருத்துவக் குழுக்கள், கடற்கரையில் சிலைகளை எளிதாக கொண்டு செல்வதற்கான வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று 2 ஆயிரத்து 237 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.