வதோதராவில் மழை காரணமாக 22 ரயில்கள் ரத்து

குஜராத் மாநிலம் வதோதராவில் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய குஜராத்தின் வதோதரா நகரில் 12 மணி நேரத்தில் 442 மிமீ மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் வதோதராவில் இருந்து செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளம் சூழ்ந்ததால், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்ததால், வதோதராவின் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்தவர்களை இடம் மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நகரின் புறநகரில் உள்ள வதோதரா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு ரயில்வே, நகரத்தின் வழியாக செல்லும் ரயில்கள் அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் ரத்து செய்யப்பட்டன. காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை, வதோதராவில் 442 மி.மீ மழை பெய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் குஜராத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version