கபினி அணையிலிருந்து 21,667 கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவானது 71 ஆயிரத்து  896 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து வரப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீரின் வரத்து 28 ஆயிரம் கனஅடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 50 ஆயிரத்து 229 கன அடியும், கபினி அணையிலிருந்து 21 ஆயிரத்து 667 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். அருவியில் குளிக்க 30வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version