நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய புற்று நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உலக சாதனை யோக நிகழ்ச்சி நடைபெற்றது…
திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். உதிட்ட பர்ஷவ கோனா ஆசனா என்ற யோகாவை 210மாணவர்கள் ஐந்து நிமிடங்கள் செய்து அசத்தினர். இதனை நோபல் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் சாதனையாக பதிவு செய்து கொண்டது. மேலும் இதற்கான சான்றிதழ்களையும் மாணவர்களிடம் வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.