21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நண்பகல் டெல்லியில் நடைபெற உள்ளது.
17வது மக்களவைக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், இன்று பிற்பகல் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருக்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு அனைவரும் கூட்டாக இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், விவிபேட் இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் தொடர்பாக மனு அளிக்க இருப்பதாக தெரிகிறது.