21 குண்டுகள் முழங்க ராஜேந்திரன் உடலுக்கு அரசு இறுதிமரியாதை

சாலை விபத்தில் உயிரிழந்த மக்களவை உறுப்பினர் ராஜேந்திரனின் உடல், விழுப்புரம் அருகே அவரது சொந்த நிலத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேற்று காலை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். அப்போது திண்டிவனம் அருகே சாலையின் தடுப்பு கட்டையில் மோதி, அவரது கார் விபத்துக்குள்ளானது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். பின், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இதையடுத்து ராஜேந்திரனின் உடல், விழுப்புரம் மாவட்டத்தில் அவரது சொந்த ஊரான ஆதம்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நண்பகலில் அவரது விவசாய நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், ராஜேந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version