இன்னும் சில நாட்கள் தான் அடுத்து 2020ம் ஆண்டை கையாள போகிறோம். இந்த ஆண்டில் ஒரு சின்ன பிரச்சனை உள்ளது. அது 2020 என்பது தான்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் புது வருடம் பிறக்கும்போதும், அதில் சிறப்பு, பிரச்னை என ஏதாவது ஒரு விஷயத்தை கையில் எடுத்து சமூக ஊடகங்களில் பெரும்பாலும் வதந்தியாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பரவும் தகவலை அப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
அப்படி என்ன தகவல் பரவுகிறது என்றால், 2020ஆம் ஆண்டயை 2020 என்று முழுமையாக எழுதுவதற்குப் பதில், 20 என்று மட்டும் எழுதினால், அந்த இருபதுக்குப் பிறகு கூடுதலாக எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணை எளிதில் சேர்க்க முடியும். இதனால் பிரச்னை ஏற்படலாம்.
வழக்கமாக 1-1-2019 என்பதை 1-1-19 என்று கூட எழுதுவோம். இதனால் எந்த பிரச்னையும் இல்லை.
இதுவே 1-1-2020 என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை 1-12-20 என்று மட்டுமே ஏதேனும் ஆவணங்களில் குறிப்பிட்டால் அதை ஃபோர்ஜரி செய்ய நினைக்கும் நபர்கள் கூடுதலாக இரண்டு எண்களைச் சேர்த்து அதற்கு சிக்கல் ஏற்படுத்திவிடலாம்.
அதாவது, வெறும் 20 என்று குறிப்பிட்டால் அதன் பிறகு 10, 15, 21 என எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணைச் சேர்த்தாலும் பிரச்னை ஏற்பட்டுவிடும். 20ம் ஆண்டு வாங்கினேன் என்று மொட்டையாக குறிப்பிட்டீர்கள் என்றால், வில்லங்கம் செய்ய நினைக்கும் நபர் 20 உடன் 15 என்று எழுதிவிட்டால், 2020க்கு பதில் 2015 ஆக அது மாறிவிடும். அது ஏதாவது ஒரு வில்லங்கத்தை ஏற்படுத்திவிடலாம்.
நீங்கள் தேதியை 1-1-2020 என்று குறிப்பிடுகின்றீர்களா, 1/1/2020 என்று குறிப்பிடுகின்றீர்களா என்பதில் பிரச்னை இல்லை.
ஆனால், எழுதும்போது முழுவதுமாக எழுதுங்கள். நீங்கள் பெறும் ஆவணங்களிலும் முழுமையாக எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் ஏமாறவோ, ஏமாற்றம் அடைவதையோ தடுக்க முடியும்.