உத்தரப் பிரதேச மாநில பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால் 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நான்கு லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இது 12 சதவிகிதம் அதிகமாகும். விமான நிலைய மேம்பாட்டிற்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பசு காப்பகங்களுக்கு சுமார் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவு சாலைகளுக்கு மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரபிக், பெர்சியன் மொழிகளை வளர்க்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.