2018 – 2019 உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும்

நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 2 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று மத்திய புள்ளியல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில் தேசிய வருவாய் எதிர்ப்பார்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 7 சதவிகிதமாக இருந்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் இது மந்தமான வளர்ச்சி என்றும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 2 சதவிகிதமாக வளர்ச்சி அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. முன்னதாக உற்பத்தி, கட்டுமானம், சேவை போன்ற துறைகளில் மந்தமான வளர்ச்சியால், ஜிடிபி குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version