நெல்லை மாவட்டம் தென்காசியில், பிரிந்து சென்ற 20 ஆயிரம் தொண்டர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். 20 ஆயிரம் தொண்டர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிக்காக, தென்காசி வாய்க்கால் பாலம் அருகே பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் தொண்டர்களின் கரவொலி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, அதிமுக நிர்வாகிகள் வரவேற்புரை நிகழ்த்தினர். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.