கோவையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 20 ஆயிரம் புதிய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் முதல் கர்நாடகா வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவை முதல் பொள்ளாச்சி வரையில் சாலையின் இரு புறங்களிலும் இருந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.
இத்திட்டம் ஆரம்பத்தின் போது வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகள் நடப்படும் என அரசு சார்பில்
அறிவிக்கப்பட்டது. அதன்படி கிணத்துக்கடவை அடுத்துள்ள காட்டம்பட்டி கிராமத்தில் முதல் கட்டமாக 10ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கியது.