2000 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடி சாதனை

தேனி மாவட்டம் போடியில் உள்ள தனியார் பள்ளியில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு 2 ஆயிரம் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தனர்.

தேனி மாவட்டம் போடியில் தனியார் பள்ளியில் உலக பெண்கள் தின விழாவையொட்டி நர்த்தன கலா ஷாலா அமைப்பு மூலம் பதஞ்சலி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட 2ஆயிரம் மாணவிகள் 7 நிமிடம் பரதநாட்டியம் ஆடினர். இந்நிகழ்ச்சியில், ராயப்பன்பட்டி பள்ளி முதல்வர் மேரி ராணி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version