எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ நாய் இறைச்சியை உணவு பாதிகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரிய அளவிலான உணவகங்கள் ஏராளமாக உள்ளன. இந்த உணவகங்களையும், மாமிச பிரியர்களையும் குறிவைத்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் 20 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் விரைவு ரயிலில் வந்த இந்த இறைச்சி பெட்டிகள், எழும்பூரில் இறக்கப்பட்டன. அதிகப்படியான துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகம் அடைந்த ரயில்வேத்துறை அதிகாரிகள், இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து இறைச்சி பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்ததில் 2 ஆயிரம் கிலோ அளவிலான நாய் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version