தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பிள்ளை விளையில் சட்டவிரோதமாக 200 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தலைமையிலான குழு அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சங்கு குடோன் ஒன்றின் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் சாக்கு மூட்டைகளில் கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சதாசிவம் ஆகியோரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.