மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தொடர்ந்து 200 நாட்கள் தடையின்றி மின் உற்பத்தி செய்து சாதனை

மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின்நிலையத்தில், தொடர்ந்து 200 நாட்கள் தடையின்றி மின் உற்பத்தி செய்யப்பட்டதற்கு, அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்தின் முதல் பிரிவில் 4 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து 2-வதாக 2013-ஆம் ஆண்டில் 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் 600 மெகாவாட் அனல் மின் நிலையம் தொடங்கியது முதல், அவ்வப்போது ஏதாவது ஒரு காரணத்தால் மின் உற்பத்தி தடைகள் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது தொடர்ந்து இன்றுடன் 200-வது நாளாக தடையில்லா மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் நிலையம் தொடங்கிய 7 ஆண்டுகளில் இவ்வாறு உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version