ஊரடங்கால், சிவகாசியில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பள்ளி மற்றும் கல்லூரி நோட்டுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிவகாசியில் 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பள்ளி, கல்லூரி நோட்டுகள் அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டுகள் முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தயாரிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
33 சதவீதப் பணியாளர்களுடன் அச்சகங்கள் இயங்கினாலும், 10 சதவீதம் கூட ஆர்டர் கிடைக்காததால் நஷ்டம் அடைந்து வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்யும் நிலையில், வங்கிக் கடனுக்கான வட்டியில் சலுகைகளை அளிக்க அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.