நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் லுங்கி, கர்சிப் மற்றும் துண்டுகள் தயாரிக்கப்பட்டு வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் அறிவித்தபடி கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.