புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து ஃபேஸ்புக் மூலம் கோவிட் கவனம் பற்றிய நேரடி ஒளிபரப்பை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் வழங்கிய 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கருப்பு பூஞ்சை நோயை விரைவில் குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்