டெல்லி மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறைவால் 20 நோயாளிகள் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் சூழ்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

”நீங்கள் பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ மக்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிர் பிழைக்க உதவுங்கள்” என்று டெல்லி நீதிமன்றம் கடுமையாக கூறியது.

இந்த நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க ராணுவ விமான டேங்கர் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

ஆனாலும் டெல்லி மருத்துவமனைகளில் தேவையான மொத்த ஆக்சிஜனில் 10 % மட்டுமே கிடைக்கிறது என்று அங்குள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கின்றன

இந்த நிலையில் டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறைவால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பரவும் கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை, இறப்பு விகிதம் அதிகம் போன்றவை டெல்லி மக்களை மட்டுமில்லாம் நாட்டில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை

Exit mobile version