வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக மின்சார எரியூட்டு தகன மையம் அமைத்துக் கொடுத்த தமிழக அரசிற்கு பூங்காவின் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா வண்டலூர் பூங்காவில் ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என 1000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழக்கும் வன விலங்குகள் மேடையில் வைத்து தகனம் செய்யப்படுகிறது. இதற்காக மின்சார எரியூட்டு தகன மையம் அமைத்து தரக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புதிய மின்சார எரியூட்டு தகன மையம் அமைக்கப்பட்டுள்ளது.