2 வருடப்பகை….இப்ப தீர்த்துக்கிட்டேன் – விளக்கம் கொடுத்த விராட் கோலி

முதலாவது 20 ஓவர் போட்டியில் மைதானத்தில் நடந்த செயல் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 95 ரன்கள் விளாசினார்.

ஆட்டத்தின் இடையே விராட் கோலிக்கும்- வெஸ்ட்இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் நடைபெற்ற நிகழ்வு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி பேட்டிங்கின் போது விக்கெட் வீழ்த்திய கெஸ்ரிக் வில்லியம்ஸின் அதனை நோட்புக்கில் குறிப்பது போல செய்கை காட்டினார். இதனைப் பார்த்த விராட் கோலி கெஸ்ரிக் வில்லியம்ஸின் அடுத்த ஓவரில் சிக்சர் பறக்கவிட்டு பதிலுக்கு நோட்புக்கில் குறிப்பது போல செய்து காட்டி வெறுப்பேற்றினார்.

இந்நிலையில் நோட்புக் செயல்முறை குறித்து கோலி விளக்கமளித்துள்ளார். அதில் , ” 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் எனது விக்கெட்டை எடுத்து விட்டு, நோட்புக்கில் குறித்து வைத்துக்கொள்ளும்படி செய்கை காட்டினார். அதனை நான் மறக்கவில்லை. அதனால் தான் அவரது ஓவரில் சிக்சர் அடித்து அந்த நோட்புக்கை நான் இன்று அவரிடம் திருப்பி கொடுத்தேன். மற்றபடி நான் எப்போதுமே மற்ற அணிகளுக்கு மரியாதை தருபவன் தான் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version