ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி திட்டம் இன்று தொடக்கம்

ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகளுக்கு குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். நிதியுதவியை அளிப்பதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக கணக்கெடுப்பு நடைபெற்று விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

 

Exit mobile version