புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உள்பட 2 பேரை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

புல்வாமா மாவட்டத்தின் பிங்லான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால், பதற்றமான சூழல் நிலவியது.

இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட கம்ரான் என்ற தீவிரவாதி உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று  காலை  தீவிரவாதிகளுடனான சண்டையில், ராணுவ மேஜர் உள்பட ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமடைந்தனர். ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version