சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வு பயிற்சியில் படித்து வந்த 2 மாணவிகள் மாயமானதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேனாம்பேட்டை யாழ்யாழ் முதல் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வேலூரை சேர்ந்த சரஸ்வதி மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த கீதாஞ்சலி ஆகிய இருவரும் தங்கி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை விடுதியில் இருந்து வெளியில் சென்ற அவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விடுதியின் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்களை பார்ப்பதற்காக மாணவிகள் இருவரும் வெளியில் சென்றார்களா என்ற கோணத்தில் அவர்கள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.