2 ஆண்டுகளுக்கு முன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

ஜெயங்கொண்டத்தில் 2 வருடத்திற்கு முன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், நகை பணம் கொள்ளையடித்த பெண் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் வசித்து வரும் குணசேகரன் என்பவர்,பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் வருடம் மாதம் 28ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவருடைய மனைவி பாரதி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் இருந்த 10 சவரன் செயின் மற்றும் 2 சவரன் வளையல் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தனிப்படை காவல் துறையினர் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணையும், நத்ததை சேர்ந்த சின்ராசு ஆகியோரை கைது செய்து, 15 சவரன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version