2.o படம் திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றமா? 2000 இணையதளங்கள் முடக்கம்

 

 ரஜினிகாந்த், அக்க்ஷய்குமார்,எமி ஜாக்சன் நடிப்பில் சுமார் 570 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் 2.o, திரைப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி உள்ளிட்ட 14 மொழிகளில் நாளை உலகம் முழுக்க வெளியாக உள்ளது.

இந்த நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனான லைக்கா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,
2.o திரைப்படத்தை திருட்டு தனமாக வெளியிடக்கூடும் என கருதப்படும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,564 இணையதளங்களை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டது..

குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், ஒரு பெயரில் முடக்கப்பட்டால் இன்னொரு பெயரில் படத்தை வெளியிடுவதாகவும், நீதிமன்றத்தை நாடி தடைபெற்றால், அந்தச் செய்தியையும் இணையதளத்தில் வெளியிட்டு அதை காரணம் காட்டி வழக்கத்தைவிட படத்தை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியிடுவதாக தெரிவித்த லைக்கா தரப்பு வழக்கறிஞர்கள், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் எந்தெந்த பின் எழுத்துக்களை மாற்றக் கூடும் என்ற அனுமான பெயர்கள் அடங்கிய 2000 பெயர் பட்டியல் தாக்கல் செய்துள்ளதாவும், அதோடு சேர்த்து இன்ன பிற இணையதளங்களின் பட்டியல் என மொத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12,564 இணையதளத்தை முடக்க வேண்டும்எனவும் மனுவில் கோரப்பட்டது.அதை ஏற்ற நீதிபதி சுந்தர், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,564 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளார்..

Exit mobile version