காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. சோபியான் மாவட்டத்தில் பதற்றம் நீடித்துவருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Exit mobile version