தேயிலைத் தோட்டத்தை சுற்றி பார்க்கும் 2 சிறுத்தைகள்

 உதகை அருகே  சுற்றி வரும் 2 சிறுத்தை புலிகளை  கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

உதகை அருகே உள்ள தீனட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில், இரண்டு சிறுத்தைகள் கடந்த சில தினங்களாக உலா வருகின்றன. நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அங்குள்ள பாறைகள் மீது அமர்ந்து விளையாடும் இவை கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் எந்த வித இடையூறும் தருவதில்லை. பொதுமக்கள் தங்களை ரசிப்பதை கூட பொருட்படுத்தாமல் சிறுத்தைகள் விளையாடி மகிழ்வது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Exit mobile version