அரசுப் பேருந்து மோதி பணிமனை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 ஊழியர்கள் மரணம்

சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் அரசுப் பேருந்து மோதி பணிமனை சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவு பணிகள் முடித்துவிட்டு ஊழியர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது பராமரிப்பு பணிக்காக பணிமனைக்கு வந்த பேருந்து மோதி சுவர் இடிந்து விழுந்ததில் பணிமனை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வடபழனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகர போக்குவரத்து இயக்குனர் கணேசன் விபத்து குறித்து முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version