ஆந்திராவில் 2 கோடி மதிப்பிலான 66 செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் வளர்கின்றன.இங்கிருந்து செம்மரக் கடத்தலை தடுப்பதற்காக கடப்பா போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்தின அடிப்படையில் சுப்புராஜ், நாகினி சிவா, நாராயணா, என்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சென்னை செங்குன்றத்தில் உள்ள ராம்குமார் என்பவருக்கு செம்மரம் வெட்டிக் கொடுக்கும் கூலிகள் என்பது தெரிய வந்தது. இதனால் செங்குன்றம் வந்த கடப்பா போலீசார் ராம்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கோடி மதிப்பிலான 66 செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு கார் ,கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.