கள்ளக்குறிச்சி அருகே உள்ள 2ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கல்வாரயன்மலைப்பகுதிகளில் அடிக்கடி கள்ளச்சாராயம் காய்ச்சபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மதுவிலக்குப் போலீசார் நடத்திய சோதனையில், சேத்தூர், எருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதையொட்டி, தொட்டிகளில் 2ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் தயாரிக்க போடப்பட்டிருந்த ரசாயனக்கலவையை அழித்தனர். இவ்வழக்கில் 2 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.