தேக்கடி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து 2 , 779 கன அடியாக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக தேக்கடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் ஆயிரம் கன அடி அதிகரித்து 2 , 779 கன அடியாக உயர்ந்துள்ளது. அணைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணையில் இருந்து தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.