2.0 திரைப்படத்தின் பாடல் வரிகளை கொண்ட வீடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான எந்திரன் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அதன் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். வில்லனாக இந்தி திரைப்பட நடிகரான அக்சய் குமார் நடித்துள்ளார்.

இந்த திரைப்படமானது வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேலையில்., தொழில்நுட்ப பணிகள் பாக்கி இருப்பதன் காரணமாக நவம்பர் மாதம் 29 ம் தேதி திரைக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது என்று படக்குழு அறிவித்தது. இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகள் நாளை காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version