பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்று கொண்டனர். நேற்று நடந்த விழாவில் 24 கேபினட் அமைச்சர்களும், 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 24 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்நிலையில் மோடி 2-ஆவது முறையாக பதவியேற்றதும், அவர் தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும், கூட்டத்தொடர் ஜுன் -6ஆம் தேதி துவங்கி நடக்க வாய்ப்பிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத்தலைவர் உரையுடன் துவங்கும் இக்கூட்டத்தில் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு மற்றும் புதிய சபாநாயகர் தேர்வு ஆகிய நடைபெற உள்ளது.

Exit mobile version