190 மில்லியனுக்கு விலை போனது புகழ் பெற்ற டைம் இதழ்

உலகம் முழுவதும் புகழ் பெற்ற டைம் வார இதழ் தொடங்கப்பட்டு 95 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அந்த நிறுவனத்தை சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் சேர்ந்து மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து 190 மில்லியனுக்கு வாங்கியுள்ளனர். இது அவர்களுடைய சொந்தமாக வாங்கப்பட்டது. இதற்கும் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதழின் தலைமையை தற்போதுள்ள நிர்வாகக் குழுவே மேற்கொள்ளும் என்றும், பத்திரிக்கை வாங்கினாலும் அதன் அன்றாட நடவடிக்கைகளிலோ, இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version