தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

19 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அதன்படி, தமிழக மின்வாரிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு டிஜிபியாக தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். குற்ற ஆவணக் காப்பக டிஜிபியாக கரண் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி ஜாங்கிட், கும்பகோணம் போக்குவரத்து கழக ஊழல் தடுப்பு டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு டிஜிபியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமையக ஏடிஜிபியாக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு ஏடிஜிபியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை ஐஜி.யாக ஏடிஜிபி ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுத்துறை ஏடிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழல் தடுப்பு ஏடிஜிபியாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பத்துறை ஏடிஜிபியாக அசோக் குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையக ஐஜியாக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version