19-ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – அஇஅதிமுக அறிவிப்பு

வரும் 19-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அஇஅதிமுக அறிவித்துள்ளது.

சென்னையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சுமார் 3 மணி நேரம் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வரும் 22-ந் தேதி கன்னியாகுமரி மற்றும் வரும் 30-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

வரும் 19-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறும் நிலையில், திமுக வேண்டுமென்றே அவதூறு கூறி வருவதாகக் கூறினார். அஇஅதிமுக வழிகாட்டுதல் குழு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version