துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்கள் பலி!

ஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 18 பேர் உயிரிழந்தனர். துருக்கி, ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து குர்திஷ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை பின்பற்றி வருகின்றனர். இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். இந்நிலையில், கான்டில் மலைப் பகுதியில் பதுங்கி இருந்த குர்திஷ்தான் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து துருக்கி நாட்டின் விமானப்படைகள் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 18 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version