99 சதவீத பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி – பிரதமர் மோடி

99 சதவீத பொருட்கள், 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்த நடவடிக்கையான இதில், நான்கு அடுக்காக வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், 99 சதவீத பொருள்களை, 18 சதவீதத்துக்கும் குறைவான ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார். நாட்டில் ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு முன்பு, 65 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இருந்தாக கூறிய அவர், ஜிஎஸ்டி-க்குப் பிறகு 55 லட்சம் புதிய நிறுவனங்கள் வரி வரம்புக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version