டெல்லியில் நிகழ்ந்த வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அச்சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்தது.
மவுஜ்பூர், பாபர்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஏராளமானோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.