ஜோலார்பேட்டையிலிருந்து இரயில் மூலம் எடுத்து வரப்பட்ட 176 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெயிலின் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்து போனதாலும், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து இரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி ஜோலார்பேட்டையிலிருந்து ஜூலை 12ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 2ரயில்கள் மூலம் தலா 2.75லட்சம் தண்ணீர் வீதம் 5.5லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டையிலிருந்து இதுவரை 64 முறை ரயில் மூலம் 176 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.