175 மில்லியன் வியூஸ் தொட்ட 'ரவுடி பேபி'…

குத்தாட்டம் பாட்டுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அதும் படத்தில் வரும் ஹீரோ-ஹீரோயின் குத்தாட்டம் என்றால் சொல்லவே வேண்டாம்… ரசிகர்களுக்கு அவ்வுளவு பிடிக்கும். திருடா திருடி படத்தில் வரும் “மன்மத ராசா”, கில்லி படத்தில் வரும் “அப்படி போடு”, மன்மதன் படத்தில் வரும் “என் ஆச மைதிலியே” என சொல்லிக் கொண்டே போகலாம்..

அப்படி இருக்க… சமீபத்தில் மாரி – 2 படத்தில் வரும் “ரவுடி பேபி” பாட்டுக்கு அவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த அந்த பாட்டுக்கு தனுஷ்-சாய் பல்லவி குத்தாட்டம் சூப்பர் ஹிட்டானது. பிரபு தேவா இந்த பாட்டுக்கு choreograph செய்திருந்தார். டிக் டாக், மியூசிக்கலி என பல டப்மேஷ் ஆப்-களிலும் இந்த பாட்டு ரிபீட் மோடிலேயே இருந்து வருகிறது.

ஜிகு ஜிகுனு இந்த பாடல் Youtube-ல் 176,831,937 views-ஐ தொட்டுள்ளது. Youtube-ல் 175 மில்லியன் தொட்ட முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையையும் ‘ரவுடி பேபி’ படைத்துள்ளது. இதற்கு முன், தனுஷ்-ன் Why This Kolaveri Di பாடல் தான் அதிக வியூகளை கொண்டிருந்தது.

இந்த நியூஸ் படக்குழுவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ‘ரவுடி பேபி’ இப்ப செம ‘ஹப்பி பேபி’…
வாழ்த்துக்கள் ‘ரவுடி பேபி’ படக்குழு…

Exit mobile version