உள்ளாட்சித் தேர்தலில், 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாற்ற உள்ளதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தேர்தல் பணிகளில் மொத்தம் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 3 ஆயிரத்து 777 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் அலுவலர்கள், வாக்குப் பதிவு பணிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றார். அதேநேரத்தில், மொத்தம் 41 ஆயிரத்து 500 வாக்குப் பெட்டிகள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். அதேபோல், தேர்தல் பார்வையாளராக, மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும், மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.
அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும் 40 ஆயிரம் காவலர்கள், உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.