170 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் உள்ள 170 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இதனை தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று அவர் கூறினார்.  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆயிரத்து 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்று பரவல் அடிப்படையில் நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  207 மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டிருப்பதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

Exit mobile version