17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்பட அனுமதி!

கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், 25 சதவீத பணியாளர்களுடன் நாளை முதல் இயங்க  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், திங்கள் முதல் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள 25 சதவீத தொழிலாளர்களை கொண்டு செயல்படலாம் என்றும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து  பணிக்கு வருபவர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் ஆகியவை கடைபிடிக்க வேண்டும் என்றும் பணியாளர்களின் உடல் வெப்பநிலையை தினந்தோறும் பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலையை காலை, மாலையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version