நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் சார்பில் 17 குழுக்கள் அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜகவின் சார்பில் 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி, தேர்தலுக்காக 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், முக்கியமாக கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சமூக, தன்னார்வ குழுக்களை ஒருங்கிணைப்பதற்கு நிதின் கட்காரியும், அறிஞர் குழுக்களை ஒருங்கிணைக்க பிரகாஷ் ஜவடேகரும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுக்களை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார்.

Exit mobile version