ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்ற 17 பேர் கைது

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக அதிக விலை விற்றதாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுன்ட்டர் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுக் கொண்டு வெளியே கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது.

இதனை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூளை தபால் நிலையம் அருகே ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

விசாரணையில் அவர் கொருக்குபேட்டையை சேர்ந்த கணேஷ் என்பதும், மருந்து மொத்த வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 12 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version