16-வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டிகளில் சென்னை,மதுரை, தூத்துக்குடி அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகேயுள்ள படர்ந்தபுளி கிராமத்தில் 16-வது ஆண்டு கனரா வங்கி சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. பகலிரவு போட்டிகளாக 2 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 49 அணிகள் பங்கேற்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் இறுதி போட்டியில் சென்னை அணி, தூத்துக்குடி அணியை வீழ்த்தியது. மாணவர்கள் பிரிவு இறுதி போட்டியில் தூத்துக்குடி கார்டுவெல் பள்ளி அணி, தருவைகுளம் அரசு மேல் நிலைப்பள்ளி அணியை வென்றது. பெண்கள் பிரிவின் இறுதி போட்டியில் மதுரை அணி மற்றும் கோவில்பட்டி அணியை ஜெயித்தது. பின்னர் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Exit mobile version