160 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல்

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலை ஒப்பந்தாரராக உள்ள செய்யாத்துறை என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் 200 வருமான வரி்துறை அதிகாரிகள் நேற்று விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத 160 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் சிக்கியுள்ளது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version